கடைகளில் போலீசார் அதிரடி சோதனை
கோத்தகிரி நகரில் கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி நகரில் கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நேற்று அத்தியாவசிய பொருட்களை வாங்க கோத்தகிரி நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
இதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், சண்முகவேல் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் உரிய சமூக இடைவெளியின்றி வாடிக்கையாளர்கள் நின்றால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. மேலும் நகரின் முக்கிய சாலைகளில் வாகன தணிக்கை செய்து, முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அபராதம்
மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை அதிரடி சோதனை வியாபாரிகளிடம் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், கடைகளுக்கு முன்பு கிருமி நாசினி வைக்க வேண்டும், வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினா். கோத்தகிரி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த சோதனையில் முகக்கவசம் அணியாத 20 பேருக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் உரிய சமூக இடைவெளியை வாடிக்கையாளர்கள் பின்பற்றாததால் 4 கடை உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story