கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி
கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி
குன்னூர்
குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்தது. இதனால் நிலத்தில் மழைநீர் இறங்கி குளிர்ச்சி அடைந்தது. மழை நின்றவுடன் பனி பெய்து வந்தது. பகல் நேரத்தில் மூடுபனியும் இருந்தது.
இந்த நிலையில் இந்த மாத முதல் வாரத்தில் மழை பெய்தது. இதனால் பனி சற்று குறைந்தது. தற்போது மழை நின்று விட்டதால் இரவு நேரத்தில் நீர் பனி பெய்து வருகிறது. பகல் வேளையில் மூடுபனி நிலவி வருகிறது. இதனால் குன்னூர் பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. பொதுமக்கள் கம்பளி ஆடைகளை உடுத்தி தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டாலும், பகல் மற்றும் இரவு வேளையில் நிலவும் கடும் குளிரால் அவதியடைந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story