பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் தயார்படுத்தும் பணிகள் தீவிரம்


பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் தயார்படுத்தும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 8 Jan 2022 8:16 PM IST (Updated: 8 Jan 2022 8:16 PM IST)
t-max-icont-min-icon

உடுமலைக்கு துணிப்பைகள் வந்ததால் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களை துணிப்பைகளில் போட்டு தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உடுமலை
உடுமலைக்கு துணிப்பைகள் வந்ததால் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களை துணிப்பைகளில் போட்டு தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், ரவை, உளுந்தம்பருப்பு, பாசிப்பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, துணிப்பை உள்ளிட்ட 21 வகையான பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களை வழங்குகிறது. இந்த பொருட்கள் கடந்த 4 மற்றும் 5-ந் தேதி ஆகிய 2 நாட்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ரேஷன் கடைகளுக்கு வந்திருந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் முடிந்துவிட்ட நிலையில், மேற்கொண்டு  வரவேண்டியிருந்த இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வருவதற்கு தாமதயானது. அந்த பொருட்கள் நேற்று முன்தினம்  மதியம்தான் வந்துசேர்ந்தன. ஆனால் துணிப்பை வரவில்லை.
துணிப்பை வந்து சேர்ந்தன
பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் மற்றும் துணிப்பை வராததால் கடந்த 6-ந் தேதி முதல் இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படவில்லை. பொதுமக்கள் தினசரி ரேஷன் கடைகளுக்கு வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் நேற்று துணிப்பைகள் அந்தந்த ரேஷன் கடைகளின் நிர்வாக அலுவலகங்களுக்கு வந்து சேர்ந்தன. இதைத்தொடர்ந்து பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களை, பண்டல்களில் இருந்து பிரித்து துணிப்பைகளில் போட்டு, அவற்றை பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கு தயார்படுத்தும் பணிகள் நேற்று தீவிரமாக நடந்தன. இதைத்தொடர்ந்து இவை அங்கிருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகள் நடந்தன.
நாளை வினியோகம்
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு காரணமாக ரேஷன்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் நாளை (தி்ங்கட்கிழமை) முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story