பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்
பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்
கோவை
பில்லூர் 3-வது குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள நகராட்சி ஆணையர்கள்,
பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களுடன் வளர்ச்சி பணிகள் மற்றும் குடிநீர்திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு தலைமை தாங்கி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கொரோனா நோய் தொற்றை கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
நபார்டு திட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைப்பு திட்டம், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.
செயல்பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள், நடைமுறைப்படுத்த வேண்டிய கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டு குடிநீர் திட்டம்
முன்னதாக மேட்டுப்பாளையம் தாலுகா, சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ரூ.91.70 கோடியில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகள்,
நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை கிடங்குகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடங்களில் (மணிநகர்) சாலை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
பின்னர் அவர்,ரூ.779.86 கோடி மதிப்பீட்டில் பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணியை ஆய்வு செய்து, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story