கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து


கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து
x
தினத்தந்தி 8 Jan 2022 9:03 PM IST (Updated: 8 Jan 2022 9:03 PM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு எதிரொலியாக நாகை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட உள்ளதாகவும் கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்:
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக நாகை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட உள்ளதாகவும் கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குறைதீர்க்கும் கூட்டம் ரத்து
 நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், பொது மக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் விதமாகவும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆகியவை மறு உத்தரவு வரும்வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி காணொலிக்காட்சி மூலம் திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்
.இதில் அனைத்துத்துறைகளின் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொள்வார்கள்.. இந்த “காணொலிக் காட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் முதலில் தங்களது செல்போனில் BharatVC என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் https://bharatvc.nic.in/viewer/7274914749 என்ற லிங்கை கொடுத்து அதில் 96557 என்ற கடவுச்சொல்லை கொடுத்தால் காணொலிக் காட்சி மூலம் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
காணொலிக்காட்சி
இதுதொடர்பான மேலும் விவரங்களை https://www.nagapattinam.nic.in/ என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்துகொள்ளலாம். காணொலிக் காட்சி மூலம் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் காலை 11 மணிக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். மேலும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் முககவசம் அணிந்து வந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி போட்டு செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story