ஆயில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஆயில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராசிபுரம்:
ஆயில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கட்டிட தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கண்ணகி. இவர்களுக்கு சச்சின் என்ற மகன் உள்ளார். ஜெயபால் தற்போது நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி அருகே உள்ள ஒண்டிக்கடையில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.
இவர் அடிக்கடி மது அருந்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. மேலும் மன உளைச்சலில் இருந்து வந்த ஜெயபால் நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை
இதுகுறித்து ஜெயபாலின் தந்தை செல்லன் ஆயில்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story