ஸ்ரீமுஷ்ணம் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
மாணவியை காதலிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் ஸ்ரீமுஷ்ணம் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் அருளப்பன்(வயது 20). இவர், வரதராஜன்பேட்டையை சேர்ந்த 17 வயதுடைய பாலிடெக்னிக் கல்லூரி மாணவியை காதலித்தார்.
இதுபற்றி அறிந்ததும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டித்தனர்.
இதனால் மனமுடைந்த அருளப்பன், நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் தனது வீட்டில் விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் அருளப்பன் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story