5 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை
முழு ஊரடங்கை முன்னிட்டு ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
ராமேசுவரம்,
முழு ஊரடங்கை முன்னிட்டு ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு என அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் முழு ஊரடங்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நிறுவனம் மற்றும் வியாபாரிகள் யாரும் மீன்களை வாங்க கடற்கரை பகுதிக்கு வாகனங்களுடன் வர முடியாது என்பதால் ராமேசுவரம் பகுதியில் நேற்று 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் துறைமுக கடல் பகுதியில் அணிவகுத்து நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
நாளை மீன்பிடிக்க செல்கிறார்கள்
இதேபோல் தனுஷ்கோடி, பாம்பன் தங்கச்சிமடம், ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் விசைப்படகுகள், நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
அதுபோல் நாளை (திங்கட்கிழமை) முதல் ராமேசுவரம் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்களும் வழக்கம்போல் மீன்பிடிக்க செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story