சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்தது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 8 Jan 2022 11:11 PM IST (Updated: 8 Jan 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்தது விபத்துக்குள்ளானது.

அரவக்குறிச்சி, 
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தரவடிவு (வயது 43). இவர் பெங்களூரு மரத்தள்ளி பகுதியில் தொழில் செய்து வருகிறார். இவரது அண்ணன் மகன் மனோஜ்குமார் (20). பி.ஆர்க் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கொரோனா ஊரடங்கு காரணமாக பெங்களூருவில் இருந்து வத்தலகுண்டு நோக்கி நேற்று தங்களது சொந்த காரில் சென்று கொண்டிருந்தனர். காரை மனோஜ்குமார் ஓட்டினார். இவர்களது கார் அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேட்டுப்பட்டி அருகே அதிகாலை சென்ற போது நிலைதடுமாறி சாலையின் இடதுபுற பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் காரின் கதவுகள் திறக்க முடியாதபடி மூடிக்கொண்டது. இந்நிலையில் காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு இருவரும் வெளியேறினர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் காரின் சாவியை எடுக்க முடியாமல் போனதால் சிறிது நேரத்தில் கார் தானாகவே தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story