வளர்ச்சி பணிகள் குறித்து கூடுதல் கலெக்டர் ஆய்வு
திருவாடானை யூனியனில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
தொண்டி,
திருவாடானை யூனியனில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது திருவாடானை பஸ் நிலையம் அருகில் ரூ.9 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாதிரி அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். .அங்கு குழந்தைகளை கவரும் விதமாக வண்ண ஓவியங்களுடன் அங்கன்வாடி மையம் வடிவமைக்கப்பட்டு இருப்பதையும், வளாகத்தில் காய்கறித்தோட்டம், பூந்தோட்டம். மூலிகை செடிகள் தோட்டம், குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளையும் செய்துகொடுத்துள்ள திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கியா ராமுவை நேரில் அழைத்து பாராட்டினார்.பின்னர் திருவாடானை பஸ் நிலையத்தில் இலவச கழிப்பறை செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பாண்டுகுடி ஊராட்சியில் பாண்டுகுடி, தினையத்தூர் கிராமங்களில் அங்கன்வாடி கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேவுகப்பெருமாள், பாண்டி, ஒன்றிய பொறியாளர்கள் பாலகுமார் வேதவள்ளி, ஜெயந்தி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story