ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 6¼ பவுன் நகை திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம்  6¼ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 8 Jan 2022 11:22 PM IST (Updated: 8 Jan 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 6¼ பவுன் நகை திருடி செல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 6¼ பவுன் நகை திருடி செல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6¼ பவுன் நகை திருட்டு
மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்தவர் பென்சாம். இவருடைய மனைவி மெர்லின் ஷீபா (வயது 35). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடகு வைத்து இருந்தார்.
சம்பவத்தன்று அடகு வைத்திருந்த 6¼ பவுன் நகையை மீட்டார். பின்னர் அவர் தனது தோள் பையில் அந்த நகையை வைத்துக்கொண்டு மார்த்தாண்டத்தில் இருந்து ஒரு பஸ்ஸில் ஏறி கழுவந்திட்டைக்கு சென்றார். அங்கு அவர் பஸ்சில் இருந்து கீழே இறங்கியதும் தனது பையை திறந்து பார்த்தபோது அதில் வைத்து இருந்த நகையை காணாமல் திடுக்கிட்டார். ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தோள் பையில் வைத்து இருந்த நகையை யாரோ திருடி சென்றது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து மெர்லின் ஷீபா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story