அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை


அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை
x
தினத்தந்தி 8 Jan 2022 11:31 PM IST (Updated: 8 Jan 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருேக மர்மநபர்கள் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ைளயடித்தனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருேக மர்மநபர்கள் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ைளயடித்தனர். 

கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த குடியானகுப்பம்-நாட்டறம்பள்ளி ரோடு பகுதியில் வசித்து வருபவர் முனுசாமி (வயது 55). இவரின் வீட்டில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் யாரோ கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். 

அதேபோல் குடியானகுப்பம் மாரியம்மன் கோவில் அருகில் வசித்து வரும் முத்துப்பிள்ளை என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து கால் பவுன் நகை, ரூ.1000 மற்றும் வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். 

அதேபோல் முத்துப்பிள்ளையின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சேகரின் வீட்டில் பூட்டை உடைத்து, ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

மேலும் அதேபகுதியில் வசிக்கும் சுந்தர் என்பவருடைய வீட்டின் கதவை உடைத்து கொள்ளயடிக்க முயன்றனர். 

கிராம மக்கள் பீதி

ஒரேநாளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம், 2 வீடுகளில் திருட முயன்ற சம்பவத்தால் அப்பகுதி கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Next Story