‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: பழுதடைந்த பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டது


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: பழுதடைந்த பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டது
x
தினத்தந்தி 8 Jan 2022 11:31 PM IST (Updated: 8 Jan 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பழுதடைந்த பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டது.

மணமேல்குடி, 
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் நடுநிலை பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறை கட்டிடம் மிகவும் பழுதடைந்து இருந்தது. மேலும் அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மணமேல்குடி ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி இருந்தனர். இதனைதொடர்ந்து வெள்ளூர் நடுநிலை பள்ளியின் பழுதடைந்த வகுப்பறை கட்டிடம் நேற்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் வெள்ளூர் கிராம மக்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story