கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 8 Jan 2022 11:32 PM IST (Updated: 8 Jan 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆற்காடு

ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 அப்போது ஆற்காடு வேல்முருகேசன் தெருவைச் சேர்ந்த சதீஷ் (வயது 29) என்பவரை கடந்த டிசம்பர் மாதம் கஞ்சாவோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், கஞ்சா வியாபாரி சதீசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

Next Story