வேன்-லாரி மோதியதில் 15 பேர் படுகாயம்
வேன்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை அருகில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை வேன் ஒன்று வாலாஜா பகுதியில் இருந்து ராணிப்பேட்டையை நோக்கி எம்.பி.டி. சாலையில் வந்து கொண்டிருந்தது.
ராணிப்பேட்டையை அடுத்த ஆட்டோ நகர் அருேக வரும்போது வேனின் பின்பக்க டயர் திடீெரன வெடித்தது. அந்த நேரத்தில் ராணிப்பேட்டை பகுதியில் இருந்து வாலாஜாவை நோக்கி அந்த வழியாக எதிரே வந்த டிப்பர் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் வேனில் இருந்த கலவை அருகே உள்ள கே.வேலூர் பகுதியைச் சேர்ந்த முரளி (வயது 35) என்பவர் உள்பட 5 ஆண்களும், 10 பெண்களும் என மொத்தம் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story