சி.எம்.சி. மருத்துவமனையில் முன்பதிவு நிறுத்தம்
கொரோனா பரவல், வெளிமாநில நோயாளிகள் வருகையை தடுக்க சி.எம்.சி. மருத்துவமனையில் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் ஆற்காடு சாலையில் சி.எம்.சி. மருத்துவமனை உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கொல்கத்தா, ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலத்தவர்கள் பலர் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இவர்கள் முன்பதிவு செய்து பல மாதங்களாக வேலூரில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். மாநகரில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகளில் அவர்களே தங்கி உள்ளனர்.
அவ்வாறு வருபவர்களால் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அவர்களும் பலர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் வெளிமாநில நோயாளிகளின் வருகையை தடுக்கும் வகையில் மருத்துவமனையில் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வெளிமாநிலத்தவர்கள் பலர் பல்வேறு சிகிச்சைக்கு வருகின்றனர். அவ்வாறு அவர்கள் வரும்போது கொரோனா பரவல் அதிகரிக்கிறது.
சாதாரண சிகிச்சைக்கு வருவபவர்களை தடுக்க முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா குறைந்த பின்னரே முன்பதிவு தொடங்க மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.
Related Tags :
Next Story