குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி


குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
x
தினத்தந்தி 8 Jan 2022 11:38 PM IST (Updated: 8 Jan 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
பிளஸ்-1 மாணவர்
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை அழகியநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் யுவராஜ்(வயது 15). இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மாலை யுவராஜ் தனது தம்பி விஜயேந்திரன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஆலங்குடி கிராமத்தில் உள்ள சிவன் கோவில் குளத்தில் குளித்துள்ளார். 
அப்போது யுவராஜ் நீச்சல் அடித்தபடி ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள சேற்றில் அவர் சிக்கிக்கொண்டார். உடனே அவர் தண்ணீரில் தத்தளித்தபடி தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார்.
குளத்தில் மூழ்சி சாவு
இதனை கண்ட அவருடைய தம்பி விஜயேந்திரன் மற்றும் உடன் சென்ற நண்பர்கள் கரையில் இருந்து சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம். பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் யுவராஜ் தண்ணீரில் மூழ்கி விட்டார். அங்கு ஓடிவந்தவர்களில் சிலர் குளத்தில் இறங்கி யுவராஜை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யுவராஜை மீட்க முடியவில்லை. இதனையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
தகவலின் பேரில் மயிலாடுதுறை தீயணைப்பு அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ½ மணி நேரம் போராடி யுவராசை பிணமாக மீட்டனர்.
போலீசார் விசாரணை 
பின்னர் மீட்கப்பட்ட யுவராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story