125 ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல்


125 ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Jan 2022 6:10 PM GMT (Updated: 2022-01-08T23:40:54+05:30)

மானாமதுரை அருகே 125 ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மானாமதுரை,

மானாமதுரை அருகே வேதியரேந்தல் கிராமத்தில் ஒரு தனியார் ரைஸ்மில்லில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மானாமதுரை போலீசார், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பதுக்கி வைத்திருந்த 125 ரேஷன் அரிசி மூடைகள், பருப்பு 5 மூடைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரேஷன்கடையில் இருந்து நேரடியாக அரசு முத்திரையிடப்பட்ட சாக்கு பையில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story