மாநில அளவிலான ஆக்கி போட்டி


மாநில அளவிலான ஆக்கி போட்டி
x
தினத்தந்தி 8 Jan 2022 11:45 PM IST (Updated: 8 Jan 2022 11:45 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதில் கோவில்பட்டி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

மன்னார்குடி;
மன்னார்குடியில் மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதில் கோவில்பட்டி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 
 மாநில ஆக்கி போட்டி 
மன்னார்குடியில் கடந்த 6-ந் தேதி முதல் 3 நாட்களாக மாநில அளவிலான ஆக்கி போட்டி நடைபெற்று வந்தது. இதில் சுங்கத்துறை, காவல்துறை என தமிழகம் மற்றும் புதுச்சேரிைய சேர்ந்த 18 அணிகள் கலந்து கொண்டன. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோவில்பட்டி அணியும், சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி ஆக்கி அணியும் மோதின. இதில் கோவில்பட்டி அணி 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் எஸ்.ஆர்.எம். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை  வென்றது.
பரிசளிப்பு விழா
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு மன்னார்குடி ஆக்கி சங்க தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட ஆக்கி சங்க தலைவர் சந்திரசேகரன், மாவட்ட கபடி கழக செயலாளர் ராஜராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆக்கி பயிற்சியாளர் செங்குட்டுவன் வரவேற்றார். விழாவில் பின்லே மேல்நிலைப்பள்ளி முன்னாள் தாளாளர் ஜேம்ஸ் ரெல்டன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற கோவில்பட்டி அணிக்கு வெற்றிக் கோப்பையை வழங்கினார். 2-ம் இடம் பிடித்த எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி, மற்றும் சிறப்பிடம் பிடித்த அணிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன், அரசு வக்கீல் கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
முடிவில் ஆக்கி சங்க செயலாளர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.

Next Story