ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 Jan 2022 11:47 PM IST (Updated: 8 Jan 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட புதூர் 35-வது வார்டு நாராயணன் தெருவில் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 ேபர்களுக்கு கொரோனா ்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு அந்த வீதி முழுவதும் இரும்பு தகடு தடுப்பு அமைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ‘சீல்’ வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 

மேலும் நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜங்கலாபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து பள்ளியில் ஊழியர்கள் 28 பேருக்கும் மாணவர்கள் 35 பேர் உள்பட 63 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

Next Story