மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
வாணியம்பாடியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் ஏபாநகர் பகுதியை சேர்ந்தவர் இஹ்திஷாம் (வயது 25). தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
பணி முடிந்து வந்து வீட்டின் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்ற அவர், திரும்பிவந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் அருகாமையில் உள்ள மற்றொரு வீட்டில் இருந்த சி.சி.டி.வி,கேமரா பதிவை பார்த்தபோது அதில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அதை தொடர்ந்து சி.சி.டி.வி. கேமரா பதிவுடன் வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதேபோல், முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்த ஹசேன் அஹ்மத் என்பவர் வாரச்சந்தை பகுதியில் காய்கறிகளை வாஙகி விட்டு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் போலீசார் பெருமாள்பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இளைஞரை மடக்கி விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தார்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் நேதாஜி நகர் பகுதியில் உள்ள காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த முருகன் (24) என்பதும், அவர் வாணியம்பாடி நியூடவுன் மற்றும் வாரச்சந்தை பகுதியில் அடுத்தடுத்து 2 இரு சக்கர வாகனங்களை கொள்ளையடித்தவர் என்பதும் தெரியவந்தது
அவரிடமிருந்து வாகனங்களை கைப்பற்றி, வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story