நிதி நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது


நிதி நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2022 11:53 PM IST (Updated: 8 Jan 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அருகே நிதி நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே நிதி நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 பேர் கைது
கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 22). இவர் செம்பனார்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் விஜயகுமார் மோட்டார் சைக்கிளில் கீழையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கீழையூர் செல்லகோவில் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது விஜயகுமாரை, 2 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு தாக்கியுள்ளனர். 
 இதனால் விஜயகுமார் சத்தம் போட்டுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் நடத்திய விசாரணையில் மேலப்பாதி புதுப்பேட்டையை சேர்ந்த பாலமுருகன் (24), திருச்சம்பள்ளியை சேர்ந்த குட்டி என்கிற பிரவீன்குமார் (25) ஆகிய 2 பேரும் விஜயகுமாரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story