லெட்சுமாங்குடியில் ஒரு வழிப்பாதை அமைக்கப்படுமா
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லெட்சுமாங்குடியில் ஒரு வழிப்பாதை அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூத்தாநல்லூர்;
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லெட்சுமாங்குடியில் ஒரு வழிப்பாதை அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடியை மையமாக கொண்டு திருவாரூர், மன்னார்குடி, கொரடாச்சேரி, வடபாதிமங்கலம் ஆகிய 4 வழி பிரிவு சாலை உள்ளது. இந்த 4 வழித்தடத்திலும் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். குறிப்பாக திருவாரூர் வழித்தடத்தில் உள்ள லெட்சுமாங்குடி கடைவீதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
ஒரு வழிப்பாதை
மேலும், லெட்சுமாங்குடி கடைவீதி சாலை குறுகலான சாலையாக உள்ளதால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் வாிசையாக நின்று விடுகிறது. இதனால், வாகனங்கள் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே வாகனங்களில் செல்வோர், பள்ளி மாணவர்கள், அவசர நோயாளிகள், கடைவீதியில் சென்று வருபவர்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்கிறார்கள்.
இந்த சாலை குறுகலான சாலையாக உள்ளதால் இந்த சாைலயை ஒரு வழிப்பாதையாக மாற்றினால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லெட்சுமாங்குடியில் ஒரு வழிப்பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story