மதுபாட்டில்கள் விற்றவர் கைது


மதுபாட்டில்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2022 12:08 AM IST (Updated: 9 Jan 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூரில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

வள்ளியூர்:

வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் மற்றும் போலீசார் வள்ளியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வள்ளியூர் கீழ்த்தெரு இசக்கியம்மன் கோவில் அருகே வெள்ளை சாக்குப் பையுடன் சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்தவர் போலீசாரை கண்டு ஓடினார்.

உடனே போலீசார் விரட்டி சென்று அவரை பிடித்து சாக்குப்பையை சோதனையிட்டபோது அதில் 75 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், வள்ளியூர் தெற்கு ரதவீதியை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சீனிவாசன் என்ற துரை (வயது 47) என்பதும், டாஸ்மாக் கடையில் இருந்து மதுப்பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சீனிவாசனை கைது செய்து அவரிடம் இருந்து 75 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story