பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் ரத்து
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் ரத்து
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் கலெக்டர்கள் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள் மற்றும் அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, குமரி மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் முகாம், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் உள்பட அனைத்து குறைதீர்க்கும் கூட்டங்களும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story