தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன்
மண்டலங்களுக்கு இடையேயான போலீசாருக்கான விளையாட்டு போட்டியில் ஆயுதப்படை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் பிரிவில் திருச்சி மத்திய மண்டலம் சாதனை படைத்தது.
திருச்சி, ஜன.9-

மாநில விளையாட்டு போட்டி
திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் தமிழக காவல்துறையின் 7 மண்டலங்களுக்கு இடையேயான 61-வது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 6-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது.
இதில் திருச்சி மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், கமாண்டோ ஸ்போர்ட்ஸ், தமிழ்நாடு ஆயுதப்படை, சென்னை பெருநகர போலீஸ் அணி என 7 மண்டலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என கலந்து கொண்டு விளையாடினர். நேற்று காலை இறுதிப்போட்டியும், மாலையில் பரிசளிப்பும் நடந்தது.
தமிழ்நாடு ஆயுதப்படை சாம்பியன்
இதில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற புள்ளிகள் அடிப்படையில் தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸ் அணி 33 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
அதாவது கபடி-1, கைப்பந்து-3, கூடைப்பந்து-5, கால்பந்து-3, கையூந்து பந்து-3, ஆக்கி-3, கோ, கோ-5, டேபிள் டென்னிஸ்-5, யோகா-5 என மொத்தம் 33 புள்ளிகளை தமிழ்நாடு ஆயுதப்படை அணி பெற்றது. சென்னை பெருநகர போலீஸ் அணி 23 புள்ளிகளை எடுத்து 2-ம் இடத்தை பெற்றது.
பெண்கள் பிரிவில் மத்திய மண்டலம் சாதனை
இதுபோல பெண்களுக்கான விளையாட்டில் திருச்சி மத்திய மண்டல பெண்கள் அணி 25 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அதாவது, கபடி-5, கைப்பந்து-1, கூடைப்பந்து-3, கையூந்து பந்து-3, கோகோ-3, டேபிள் டென்னிஸ்-5, யோகா-5 என 25 புள்ளிகளை மத்திய மண்டல பெண்கள் அணி பெற்றது. 21 புள்ளிகள் பெற்ற சென்னை பெருநகர போலீஸ் பெண்கள் அணி 2-வது இடத்தை பெற்றது.
தனிநபர் யோகாவில் சாதனை
இதுபோல தனிநபருக்கு வயது வாரியாக நடந்த ஆண்களுக்கான யோகா போட்டியில் தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸ் அணியை சேர்ந்த எஸ்.மாரீஸ்வரன் 4 தங்கம் வென்று ஒட்டு மொத்த சாம்பியன் ஆனார்.
இதுபோல பெண்களுக்கான தனிநபர் யோகா போட்டியில் திருச்சி மத்திய மண்டலத்தை சேர்ந்த பி.பவித்ரா 2 தங்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றார்.
பரிசளிப்பு
அதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் வரவேற்று பேசினார். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் கலந்து கொண்டு, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற ஆண்கள், பெண்கள் அணிக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் 2-ம் இடம் பெற்ற அணி, தனிநபர் சாதனை படைத்தவர்களுக்கும் பரிசுகளை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் கூடுதல் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக சிலம்பம் மற்றும் யோகா நிகழ்ச்சியில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

Related Tags :
Next Story