கார்களில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது


கார்களில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2022 12:29 AM IST (Updated: 9 Jan 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கார்களில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நெல்லை -சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் மருக்காலங்குளம் பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் 24 மூட்டைகளில் 840 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நாரணம்மாள்புரம் ராம் நகரை சேர்ந்த மாடசாமி (வயது 28), டிரைவர் தளவாய் (22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பாளையங்கோட்டை பெரியபாளையம் ரோடு பகுதியில் வாகன சோதனை நடத்திய போது ஒரு காரில் 10 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. காரில் இருந்த பாளையங்கோட்டை கக்கன் நகரை சேர்ந்த நாராயணன் மகன் சுப்புராஜா (21) மற்றும் முறப்பநாடு சென்னல்பட்டியை சேர்ந்த டிரைவர் இசக்கி பாண்டி (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து அரிசி மூட்டைகள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story