தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 9 Jan 2022 12:33 AM IST (Updated: 9 Jan 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம்,  கும்பகுறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  கும்பகுறிச்சிக்கு வந்து மூடப்பட்டு இருந்த அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தினால் இந்த அங்கன்வாடி மையம் மூடப்பட்டுள்ளது. எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் இந்த அங்கன்வாடி மையம் திறக்கப்படும்என்று கூறினர். இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும்  அப்பகுதிமக்கள் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள்,  கும்பகுறிச்சி, திருச்சி.

பராமரிக்கப்படாத சுகாதார வளாகம் 
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அம்பேத்கர் நகர் அருகில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் கடந்த 6 மாதங்களாக பராமரிப்பு இன்றி மூடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பாடாலூர், பெரம்பலூர். 

மின் விளக்குகள் அமைக்கப்படுமா? 
அரியலூர் பைபாஸ் சாலையில் அதிக அளவில் லாரிகள் மற்றும் பஸ்கள் வேகமாக செல்கிறது. இந்த நிலையில் கல்லங்குறிச்சி ரவுண்டானாவிற்கு வடக்கு பகுதியில் செண்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால் இப்பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் ராவுத்தன்பட்டி கிராமத்திற்கு  செல்லும் மக்கள்  உயிரை கையில் பிடித்த படியே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கல்லங்குறிச்சி, அரியலூர். 

குரங்குகளால் தொல்லை
திருச்சி எடமலைப்பட்டிபுதூர்  மெயின் ரோட்டில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து சென்று விடுகின்றன. மேலும் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
தியாகராஜன், எடமலைப்பட்டிபுதூர், திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை 
கரூர் மாவட்டம், வடக்கு காந்திகிராமம், பாரதியார் தெரு 1 முதல் 6-வது கிராஸ் வரையிலான பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த நிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வடக்கு காந்திகிராமம், கரூர். 

சிதிலமடைந்த ஊராட்சி மன்ற கட்டிடம் 
பெரம்பலூர் மாவட்டம், வ.களத்தூரில் இருக்கும் ஊராட்சி மன்ற கட்டிடமானது சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடமாகும். தற்போது இந்த கட்டிடம் சிதிலமடைந்து மேற்கூரை முற்றிலும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும்  சாதாரண மழை பெய்தால்கூட கட்டிடத்தில் நீர் ஒழுகியும், கட்டிட சுவர்கள் ஈரத்தன்மையுடனும் வழுவிழந்து காணப்படுகிறது.  மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள வ.களத்தூர் ஊராட்சி மன்ற கட்டிடம் இடிந்து உயிர் சேதம் ஏற்படும் முன்பு இந்த கட்டிடத்தை அகற்றி விட்டு , ஒருங்கிணைந்த ஊராட்சி மன்ற கட்டிடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
முகமது சித்திக், வ.களத்தூர், பெரம்பலூர். 

பெயர் பலகைகள் மாற்றப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு பணிமனையில் இருந்து செல்லும் நகர பஸ்களில் உள்ள பெயர் பலகையில் ஊரின் பெயர்கள் அழிந்து சரியாக தெரியாததால் பஸ் எந்த ஊருக்கு செல்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாமல் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகையால் கந்தர்வகோட்டை அரசுப்பணிமனை நிர்வாகம் பணிமனையில் இயங்கி வரும் 10 நகரப் பஸ்களில் உள்ள ஊரின் பெயர் பலகைகளை புதிதாக நன்கு தெரியும் வகையில் எழுதிவைத்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி இனாம்குளத்தூரில் குப்பைகள் சேகரிக்கப்படாமல் சாலையோரத்தில் கொட்டப்படுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் கால்நடைகள் உண்பதினால் அவற்றின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், இனாம்குளத்தூர், திருச்சி. 

குண்டும், குழியுமான தார் சாலைகள் 
திருச்சி - சென்னை சமயபுரம் பழைய நெடுஞ்சாலையிலும்,  சமயபுரம்- மண்ணச்சநல்லூர் நெடுஞ்சாலையிலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் திடீரென பிரேக் பிடித்து நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாலசுப்பிரமணியன், சமயபுரம், திருச்சி. 
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் இருந்து திருஈங்கோய்மலை வரை உள்ள திருச்சி- சேலம் நெடுஞ்சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ரவிக்குமார், தொட்டியம், திருச்சி. 

ஆபத்தான புளியமரம் 
திருச்சி மாவட்டம், முசிறி- துறையூர் சாலையில் உள்ள எல்லையம்மன் கோவில் எதிரில் உள்ள புளியமரத்தின் அடிப்பகுதி மக்கி ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இந்த மரத்தின் அருகில் மின் கம்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த புளியமரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், முசிறி, திருச்சி. 

ஆபத்தான மின்கம்பங்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள 1-வது வார்டு விடத்திலாம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் மேல் பகுதி உடைந்து துண்டாக விழும் நிலையில் உள்ளது. மின்சாரம் வினியோகத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், விடத்திலாம்பட்டி, திருச்சி. 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, வடகாபுத்தூர் ஆதிதிராவிடர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் அதன் அருகே புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மின் இணைப்பை மாற்றாமல் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 


Next Story