ஒரே நாளில் 21,283 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 21,283 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர்:
தமிழக அரசின் உத்தரவின்படி, 18-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் 190 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 343 இடங்களிலும் நேற்று நடைபெற்றது. தற்போது புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் வந்தனர். மேலும் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் இன்றைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதால் நேற்று, அவர்களில் தடுப்பூசி போடாதவர்கள் பலர் முகாமிற்கு வந்தனர். நேற்று நடந்த சிறப்பு முகாம்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 7,136 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 14,147 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டக்கோவில் அரசு துணை சுகாதார நிலையம், சாலைக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் இலுப்பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை கலெக்டர் ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story