குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும்

குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 9 Jan 2022 1:30 AM IST (Updated: 9 Jan 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருவோணம் அருகே குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரத்தநாடு:
திருவோணம் அருகே குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை  விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குவித்துள்ள நெல்மணிகள்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த காரியாவிடுதி உள்ளிட்ட பல கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு சாக்குகள், தராசு உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. 
ஆனால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணியை தொடங்காத காரணத்தால் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் செய்வதற்காக கொண்டு வந்துள்ள நெல்லை குவியல் குவியலாக  விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர்
கொள்முதல் செய்ய வேண்டும் 
அறுவடை செய்த சம்பா நெல்லை கொள்முதல் செய்வதற்காக பல நாட்களாக சாலையோரங்களில் குவித்து வைத்து காத்து கிடப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.  எனவே விரைவில் நெல்லை கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story