கர்நாடகத்தில் புதிதாக 8,906 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 8 ஆயிரத்து 906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
பெங்களூரு:
8,906 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 261 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 8,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 30 லட்சத்து 39 ஆயிரத்து 958 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 4 பேர் வைரஸ் தொற்றுக்கு இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 38 ஆயிரத்து 507 ஆக உயர்ந்து உள்ளது.
அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 7 ஆயிரத்து 113 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தட்சிண கன்னடாவில் 295 பேர், மைசூருவில் 203 பேர், உடுப்பியில் 186 பேர், மண்டியாவில் 183 பேர், ஹாசனில் 139 பேர், பெங்களூரு புறநகரில் 111 பேர், பெலகாவியில் 70 பேர், சிவமொக்காவில் 66 பேர், கோலாரில் 65 பேர், கலபுரகியில் 58 பேர், தார்வாரில் 56 பேர், துமகூருவில் 53 பேர், உத்தர கன்னடாவில் 52 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உயிரிழப்பு இல்லை
பல்லாரியில் 43 பேர், பீதரில் 13 பேர், சாம்ராஜ்நகரில் 10 பேர், சிக்பள்ளாப்பூரில் 36 பேர், சிக்கமகளூருவில் 22 பேர், சித்ரதுர்காவில் 15 பேர், தாவணகெரேயில் 12 பேர், கதக்கில் 16 பேர், குடகில் 26 பேர், கொப்பலில் 3 பேர், ராய்ச்சூரில் 4 பேர், ராமநகரில் 28 பேர், விஜயாப்புராவில் 22 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
யாதகிரி, ஹாவேரியில் மட்டும் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை. பெங்களூரு நகரில் 3 பேர், கலபுரகியில் ஒருவர் இறந்தார். மற்ற 28 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. நேற்று 508 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். 29 லட்சத்து 63 ஆயிரத்து 56 பேர் இதுவரை குணம் அடைந்து உள்ளனர். 38 ஆயிரத்து 507 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
சுகாதாரத்துறை அதிர்ச்சி
கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் இரவு முதல் நாளை காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கி இருப்பது சுகாதாரத்துறையையும், அரசையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story