19 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
புதுக்கோட்டையில் 19 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை,
கொரோனா தடுப்பூசி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் இதுவரை 19 லட்சத்து 35 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி 10 லட்சத்து 99 ஆயிரத்து 693 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 8 லட்சத்து 35 ஆயிரத்து 626 பேருக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் இளம் சிறார்கள் 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி கடந்த 3-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பூஸ்டர் தடுப்பூசி
வருகிற 10-ந் தேதி முதல் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி முதல்-அமைச்சரால் சென்னையில் தொடங்கப்பட உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 39 வாரம் கடந்த முன் களப்பணியாளர்களும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story