திருவேற்காட்டில் வாலிபர் கல்லால் அடித்துக்கொலை
திருவேற்காட்டில் வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
பூந்தமல்லி,
திருவேற்காடு அடுத்த பெருமாள் அகரம், பெரியார் நகர் பகுதியில் உள்ள முட்புதர்கள் நிறைந்த காலி நிலத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் தலையில் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக திருவேற்காடு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்தது. கொலையான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கொலையானவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த சுதிர்குமார் (வயது 35) என்பதும், சென்னை அயனம்பாக்கம், செல்லியம்மன் நகர் பகுதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி, அம்பத்தூரில் உள்ள வெல்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரிந்தது.
கடந்த வாரம் சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற சுதிர்குமார், அதன்பிறகு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததும் தெரியவந்தது. மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவருடன் தங்கி உள்ள நண்பர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story