சென்னை கிண்டியில் துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேர் கைது


சென்னை கிண்டியில் துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2022 3:53 PM IST (Updated: 9 Jan 2022 3:53 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கிண்டியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் கிண்டி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரேஸ் கோர்ஸ் பகுதியில் சுற்றிய தென்காசியை சேர்ந்த சின்னதுரை (வயது 35), மாரிசெல்வம் (34), சாம்ராஜ் (36) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனர்.

அதில் அவர்களிடம் இருந்த கைப்பையில் நாட்டு துப்பாக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த கிண்டி போலீசார், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

கைதான சின்னதுரை மீது தென்காசியில் கொலை உள்பட 3 வழக்குகள் உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கிண்டியில் உள்ள நண்பரை பார்க்க வந்ததாகவும் கூறினர். எனினும் இவர்கள் எதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சென்னையில் சுற்றித்திரிந்தனர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story