குடியிருப்பு, நில உரிமையை உறுதி செய்யக்கோரி சென்னை நகர பூர்வகுடி மக்கள் மனித சங்கிலி போராட்டம்


குடியிருப்பு, நில உரிமையை உறுதி செய்யக்கோரி சென்னை நகர பூர்வகுடி மக்கள் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2022 4:35 PM IST (Updated: 9 Jan 2022 4:35 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு, நில உரிமையை உறுதி செய்யக்கோரி சென்னை நகர பூர்வகுடி மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை,

சென்னை மாநகர பூர்வகுடி உழைக்கும் மக்களின் குடியிருப்பு, நில உரிமையை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நகர்ப்புற குடியிருப்பு, நில உரிமை கூட்டமைப்பின் சார்பாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு அருகில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. 

போராட்டத்தில், சோசலிச தொழிலாளர் மையத்தின் நிர்வாகி ஸ்ரீராம், குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலக்கமிட்டி நிர்வாகி செபாஸ்டியன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் நிர்வாகி சிலம்பு செல்வன், அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி நிர்வாகி மோகன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது, அன்னை சத்யவானி முத்து நகரில் நீண்ட நாட்களாக வீடு இழந்து சென்னை நகரத்திற்குள் மாற்று வீடுகள் கேட்டு போராடி வரும் 190 குடும்பங்களுக்கு உடனடியாக பொங்கலுக்குள் புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் வீடுகளை வழங்க வேண்டும். பெரும்பாக்கத்தில் மேலும் மக்களை குடியமர்த்துவதை நிறுத்த வேண்டும். 

பக்கிங்காம் கால்வாயோரம் வசிக்கும் மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.

Next Story