வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை- 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
வலங்கைமான் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வலங்கைமான்:-
வலங்கைமான் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பூட்டு உடைப்பு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மணலூர் ஊராட்சியை சேர்ந்த சோத்தமங்கலம் கிராமத்தில் ஜெயக்குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருடைய வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கவனித்த அக்கம்பக்கத்தினர், ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் உடனடியாக ஊர் திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை.
போலீசார் விசாரணை
மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜெயக்குமார் வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story