‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Jan 2022 7:10 PM IST (Updated: 9 Jan 2022 7:10 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:

குறுகலான பாலத்தால் விபத்து

பாளையங்கோட்டை சமாதானபுரம்- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கியின் மேற்குப்பகுதியில் சாலையின் குறுக்காக வடிகால் பாலம் உள்ளது. சாலை விரிவாக்கத்தின்போது, இந்த பாலத்தை விரிவுபடுத்தவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே குறுகலான பாலத்தை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சந்தோஷ், பாளையங்கோட்டை.

சுகாதாரக்கேடு
நெல்லையை அடுத்த பேட்டை நெல்லையாபுரம் தெருவில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளதால், கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் புகும் நிலை உள்ளது. எனவே வாறுகாலில் உள்ள அடைப்புகளை அகற்றி தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- சிதம்பரம், பேட்டை.

ஆபத்தான மின்கம்பம்

திசையன்விளை அருகே நவ்வலடியை அடுத்த காரிகோயில் விலக்கில் உள்ள மின்கம்பத்தின் உச்சியில் காங்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

சேதமடைந்த சாலை

களக்காடு கொம்புகாரன் தெருவில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகளை வேண்டுகிறேன்.
- சதீஷ், களக்காடு.

ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்- ராஜபாளையம் மெயின் ரோடு குவளைக்கண்ணியில் இருந்து சுப்புலாபுரத்துக்கு செல்லும் வழியில் சென்னிகுளத்தில் இருந்த ரெயில்வே கேட்டை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடி விட்டனர். இதனால் அங்குள்ள ரெயில்வே ஓடை பாலத்தின் வழியாக பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். மழைக்காலத்தில் ஓடையில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். எனவே சென்னிகுளத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- சிவபாலா, சுப்புலாபுரம்.

புதிய மின்கம்பம் வேண்டும்

ஆலங்குளம் தாலுகா மருதம்புத்தூர் பஞ்சாயத்து நாராயணசாமி கோவில் தெற்கு தெருவில் வட்டக்கிணறு அருகில் உள்ள மின்கம்பத்தின் காங்கிரீட் பூச்சுகள் பெயர்ந்துள்ளது. எனவே அதனை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
- லட்சுமணன், மருதம்புத்தூர்.

பராமரிப்பற்ற பயணிகள் நிழற்கூடம் 

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை மெயின் ரோடு சத்திரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. அதனை சூழ்ந்து புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இதனால் நிழற்கூடத்துக்கு வெளியில் நின்றே பயணிகள் பஸ் ஏறி செல்கின்றனர். ஆகவே பயணிகள் நிழற்கூடத்தை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமன், புதுக்கோட்டை.

வேகத்தடை வருமா?
கோவில்பட்டி கடலைக்கார தெரு வழியாக அங்குள்ள பள்ளிக்கூடத்துக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் செல்கின்றனர். அந்த தெருவில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. எனவே விபத்துகளை தவிர்க்கும் வகையில், பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடை அமைத்து வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- தங்கபாண்டியன், கோவில்பட்டி.

காட்சிப்பொருளான வழிகாட்டி பலகை 

காயல்பட்டினம் வடக்கு முத்தாரம்மன் கோவில் தெருவில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தெருவின் பெயரை எழுதாததால் வெறும் காட்சிப்பொருளாகவே உள்ளது. எனவே அதில் தெருவின் பெயரை எழுத அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆவுடையப்பன், காயல்பட்டினம்.

ரோடு மோசம்

தூத்துக்குடி அண்ணாநகர் 12-வது தெருவில் ரோடு குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. அங்குள்ள ரேஷன் கடைக்கு ஏராளமானவர்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றனர். எனவே ேராட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- செல்வம், தூத்துக்குடி.
* ஆத்தூரில் இருந்து குச்சிக்காடு செல்லும் சாலை சேதமடைந்து பல்லாங்குழி போன்று காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். ஆகவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேஷ், ஆத்தூர்.

குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?

உடன்குடி 16-வது வார்டு பெருமாள்புரம் மேல தெருவில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்படாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு குடிநீர் குழாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- மூர்த்தி, உடன்குடி.


Next Story