விசைத்தறிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது


விசைத்தறிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது
x
தினத்தந்தி 9 Jan 2022 7:40 PM IST (Updated: 9 Jan 2022 7:40 PM IST)
t-max-icont-min-icon

கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி விசைத்தறிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பல்லடம்
கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி விசைத்தறிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறிகள் வேலை நிறுத்தம்
திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம்  5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.  இந்த நிலையில்  கடந்த 24.11.2021-ந் தேதி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  பல்லடம் ரகத்திற்கு 20 சதவீதம், சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதம் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை  ஜவுளி உற்பத்தியாளர்கள் அமல்படுத்த வில்லை. 
எனவே கூலி உயர்வை உடனே அமல்படுத்தக்கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாயளர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று முதல் வேலை நிறுத்தம் தொடங்கியது. 
துணி உற்பத்தி பாதிப்பு 
அதன்படி  பல்லடம், சோமனூர், அவினாசி, புதுப்பாளையம், பெருமாநல்லூர், 63வேலம்பாளையம், தெக்கலூர், மங்கலம், கண்ணம்பாளையம் ஆகிய 9 சங்கங்களைச் சேர்ந்த கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் விசைத்தறிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. 

Next Story