குரங்கு குட்டியை பராமரிக்கும் மூதாட்டி
பந்தலூர் அருகே தவறி விழுந்த குரங்கு குட்டியை மூதாட்டி ஒருவர் பராமரித்து வருகிறார்.
பந்தலூர்
பந்தலூர் அருகே தவறி விழுந்த குரங்கு குட்டியை மூதாட்டி ஒருவர் பராமரித்து வருகிறார்.
குட்டிக்குரங்கு தவறி விழுந்தது
பந்தலூர் அருகே கிளன்ராக் ஆதிவாசி காலனி உள்ளது. இந்த பகுதி அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் காட்டு யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்த காலனி அருகே கருங்குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இந்த நிலையில் மரத்தில் கருங்குரங்குகள் தாவியபடி சென்றன. அப் போது தாய் குரங்கின் மார்பு பகுதியில் கட்டிப்பிடித்தபடி இருந்த குட்டிக்குரங்கு தவறி கீழே விழுந்தது.
மூதாட்டி பராமரிப்பு
இதனால் அந்த குரங்கு குட்டி சத்தமிட்டபடியே இருந்தது. இதை அந்த வழியாக சென்ற கிளன்ராக் ஆதிவாசி காலனியை சேர்ந்த மூதாட்டி கல்யாணி (வயது 70) அதை பார்த்தார். உடனே அவர் அந்த குட்டியை மீட்டு தனது வீட்டிற்கு கொண்டு வந்தார்.
பின்னர் அதற்கு பால், பழம் மற்றும் உணவுகள் கொடுத்து அதை தனது குழந்தை போன்று பராமரித்து வருகிறார். இந்த குரங்கு குட்டி வளர்ந்த பின்னர் அது வனப்பகுதியில் விடப்படும் என்று அந்த மூதாட்டி தெரிவித்தார்.
அரியவகை இனம்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, கருங்குரங்கு அரியவகை இனம் ஆகும். பொதுவாக தாய் குரங்கு மார்பில் பிடித்தபடி குட்டிக் குரங்கு இருக்கும். அப்போது அந்த குரங்கு ஒரு இடத்தில் இருந்து மற் றொரு இடத்துக்கு தாவும்போது குட்டி குரங்கு தவறி கீழே விழுந்து விட்டால், சில குரங்குகள் தூக்கும். ஆனால் ஏன் இந்த குட்டியை அதன் தாய் விட்டுச்சென்றது என்பது தெரியவில்லை என்றனர்.
Related Tags :
Next Story