லாரி சக்கரத்தில் சிக்கி மூதாட்டியின் கால் முறிந்தது


லாரி சக்கரத்தில் சிக்கி மூதாட்டியின் கால் முறிந்தது
x
தினத்தந்தி 9 Jan 2022 8:56 PM IST (Updated: 9 Jan 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

திருமருகலில் லாரி சக்கரத்தில் சிக்கி மூதாட்டியின் கால் முறிந்தது.

திட்டச்சேரி:
 திருமருகல் மெயின் ரோட்டை சேர்ந்த தங்கராசு மனைவி ஆதிலெட்சுமி (வயது 70). இவர் சம்பவத்தன்று காலை திருமருகல் மெயின் ரோட்டில் உள்ள செல்லியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மருங்கூரில் இருந்து பனங்குடிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஆதிலெட்சுமி மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி அவரது  வலது கால் முறிந்தது. படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பனங்குடி ஊராட்சி சன்னமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த சிவகுமார் (54). என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story