முதியவர் வெட்டிக் கொலை
சாயர்புரம் அருகே முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
முதியவர்
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் உடையடியூரை சேர்ந்தவர் அய்யப்பன் மகன் நாகபத்திரன் (வயது 66). இவருக்கு சொந்தமான மாடுகளை காணவில்லை. அதை தேடியபோது சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி - மீனாச்சிபட்டி ரோட்டில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்ததை அறிந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த மாடுகளை அழைத்து வருவதற்காக நேற்று நாகபத்திரன் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
வெட்டிக்கொலை
இந்தநிலையில் மீனாட்சிபட்டி சாலையோரத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த சாயர்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவருடைய கழுத்தில் வெட்டு காயங்கள் இருந்தன. எனவே அவரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேக்கிறார்கள்.
நாகபத்திரனின் உடலை போலீசார் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக சாயர்புரம் போலீசில் நாகபத்திரன் மகன் முத்துக்குமார் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிந்தா வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story