திருவாரூர் மாவட்டத்தில், ஒரே நாளில் ரூ.3 கோடியே 10 லட்சத்துக்கு மது விற்பனை


திருவாரூர் மாவட்டத்தில், ஒரே நாளில் ரூ.3 கோடியே 10 லட்சத்துக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 9 Jan 2022 9:12 PM IST (Updated: 9 Jan 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.3 கோடியே 10 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றது.

திருவாரூர்:-

முழு ஊரடங்கு எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.3 கோடியே 10 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றது. 

மதுக்கடைகள்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. 
எப்போதும் பரபரப்பாக இயங்கும் மதுக்கடைகளும் நேற்று பூட்டப்பட்டன. மதுக்கடைகள் மூடப்படும் என்பதை அறிந்து கொண்ட மதுப்பிரியர்கள் நேற்றைய தேவைக்கான மதுபானங்களை நேற்று முன்தினமே வாங்கி குவித்தனர். இதனால் நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. 

கூடுதலாக ரூ.1 கோடிக்கு விற்பனை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 108 மதுக்கடைகளிலும் நேற்று முன்தினம் மது விற்பனை படுஜோராக நடந்தது. ஒரே நாளில் ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பிலான பீர் மற்றும் மது வகைகள் விற்பனையானது. 
சராசரியாக நடைபெறும் மது விற்பனையை விட கூடுதலாக ரூ.1 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story