கஞ்சா விற்ற 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் மேற்பார்வையில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுக்கோட்டை அருகே சிறுபாடு விலக்கு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக தூத்துக்குடியை சேர்ந்த இஸ்மாயில் (வயது 54), தூத்துக்குடி வடக்கு ரத வீதியை சேர்ந்த மோகன் (58) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story