கொரோனா பரவல் அதிகரிப்பு: சமூக இடைவெளியை கடைபிடிக்க கடைகளின் முன்பு மீண்டும் வட்டம்
கொரோனா பரவல் அதிகரிப்பு சமூக இடைவெளியை கடைபிடிக்க கடைகளின் முன்பு மீண்டும் வட்டம்
நாமக்கல், ஜன.10-
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாமக்கல் நகராட்சியில் முககவசம் அணியாத நபர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.
கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பட்சத்தில் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கடைக்குள் வாடிக்கையாளர் முககவசம் அணியாவிட்டால், கடைக்காரருக்கே அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே கடைக்காரர்கள் தங்களின் கடைகள் முன்பு வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக பெயிண்டு உதவியுடன் மீண்டும் வட்டங்களை வரைந்து வருகின்றனர். நாமக்கல் பிரதான சாலையில் உள்ள மருந்து கடை முன்பு நேற்று ஊழியர்கள் வட்டம் வரைந்தனர்.
இனிவரும் காலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என நிபுணர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story