வத்தலக்குண்டுவில் கட்சி அலுவலகத்தை சூறையாடி ஊழியரை வெட்டியவர் கைது
வத்தலக்குண்டுவில் கட்சி அலுவலகத்தை சூறையாடி ஊழியரை வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் வதிலைசெல்வம் அலுவலகம் உள்ளது. இங்கு கோட்டைப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 22) ஊழியராக உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வத்தலக்குண்டு தெற்கு தெருவை சேர்ந்த பாலா (36) இந்த அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடி கதவுகளை பட்டாக்கத்தியால் அடித்து நொறுக்கி சூறையாடினார். அப்போது ராமகிருஷ்ணன் இதை தடுக்க முயன்றார். இதில் அவருக்கு வலது கையில் வெட்டு விழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வத்தலக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து பாலாவை கைது செய்தார்.

Related Tags :
Next Story