முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக குறைந்தது


முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 9 Jan 2022 10:06 PM IST (Updated: 9 Jan 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாத நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக குறைந்தது.

கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைத்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. அதன்படி கடந்த 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 140.90 அடியாக இருந்தது. அதன்பிறகு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லை. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால், அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அதன்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 138.50 அடியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 203 கனஅடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story