போடி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு


போடி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Jan 2022 10:09 PM IST (Updated: 9 Jan 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போடி:
போடி அருகே உள்ள டி.ஒவுளாபுரத்தை சேர்ந்தவர் சூரியா (வயது 25). இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு அந்த சிறுமியை சூரியா திருமணம் செய்து, சேலத்திற்கு அழைத்து சென்றார். தற்போது கர்ப்பிணியாக இருக்கும் சிறுமியை, அவரது பெற்றோரும், சூரியாவின் பெற்றோரும் பராமரிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. 
இதனால் அந்த சிறுமியை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சூரியா சேர்த்தார். அப்போது டாக்டர்கள் வயது விவரங்களை கேட்டபோது, அந்த சிறுமி திருமண வயதை எட்டவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 
இதைத்தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்ததாக சூரியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமி காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story