தமிழகத்தில் முழு ஊரடங்கு ஓசூர் அருகே எல்லையில் கர்நாடக பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன
தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் ஓசூர் அருகே தமிழக எல்லையில் கர்நாடக பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
ஓசூர்:
தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் ஓசூர் அருகே தமிழக எல்லையில் கர்நாடக பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்தது.
இதையொட்டி தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடைகள் அடைக்கப்பட்டன. பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
கர்நாடக பஸ்கள்
ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடியில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வந்த கார் உள்ளிட்ட வாகனங்களை மட்டும் தமிழகத்திற்குள் அனுமதித்தனர். அந்த வாகனங்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டன.
இதனிடையே கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு பஸ்கள் வந்தன. அந்த பஸ்களை எல்ைலையில் தடுத்து நிறுத்தியதுடன், அதனை தமிழகத்துக்குள் அனுமதிக்க மறுத்து போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் கர்நாடகாவில் இருந்து வந்த சில பயணிகள் நடந்தவாறு ஓசூர் நோக்கி சென்றனர்.
Related Tags :
Next Story