பாலக்கோடு அருகே 6 மாத பெண் குழந்தை திடீர் சாவு


பாலக்கோடு அருகே  6 மாத பெண் குழந்தை திடீர் சாவு
x
தினத்தந்தி 9 Jan 2022 10:25 PM IST (Updated: 9 Jan 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே 6 மாத பெண் குழந்தை திடீரென இறந்தது.

பாலக்கோடு:
பாலக்கோடு அருகே கொலசனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கமலநாதன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தமிழ்மொழி. இந்த தம்பதிக்கு கனிஷ்கா(3) என்ற குழந்தையும் 6 மாதத்தில் மனுசாதிரி என்ற பெண் குழந்தையும் இருந்தனர். சம்பவத்தன்று குழந்தை மனுசாதிரிக்கு திடீரென உடல்நிலம் பாதிக்கப்பட்டதால் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் குழந்தை திடீரென இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story