தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குடிநீர் குழாயில் உடைப்பு
புதுக்கடை - பரசேரி சாலையில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்களில் மத்திகோடு பாலம், கருக்குப்பனை ஜங்ஷன், மானான்விளை போன்ற பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் சாலையில் வீணாக பாய்ந்து செல்கிறது. அத்துடன் அந்த பகுதியில் சாலை சேதமடைந்து மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். ஆகவே மேற்கண்ட பகுதிகளில் உடைந்த கூட்டுக்குடிநீர் திட்ட குழாயை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எட்வின், மத்திகோடு.
வடிகால் வசதி வேண்டும்
ஆசாரிபள்ளத்தில் இருந்து ஆளூர் செல்லும் சாலையில் ஒரு துணை சுகாதார நிலையம் உள்ளது. அதன் பின்னால் உள்ள தெருவில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால், மழைக்காலங்களில் தெருவில் வெள்ளம் தேங்கி நிற்பதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, தெருவில் மழைநீர் வடிகால் வசதி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்டனி சதீஷ், ஆசாரிபள்ளம்.
கால்வாயில் தேங்கும் கழிவுகள்
தெங்கம்புதூர் அருகே காமச்சன்பரப்பூர் பகுதியில் ஒரு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் சரியாக தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் பாய்ந்து செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும், கால்வாயில் அடித்து வரப்படும் இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நின்று அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, கால்வாயில் உள்ள அடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், காமச்சன்பரப்பூர்.
சாலையில் பாயும் கழிவுநீர்
வேர்கிளம்பி சந்திப்பு பகுதியில் எப்போதும் மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் சாலையில் உள்ள கழிவுநீர் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் சாலையில் பாய்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
தெருவிளக்குகள் எரியவில்லை
பார்வதிபுரம் அருகே களியங்காடு பகுதியில் பல மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால், இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் பெண்கள், முதியவர்கள் மற்றும் டியூசனுக்கு சென்று வரும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகளை எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எல்.முருகன், களியங்காடு.
சுகாதார சீர்கேடு
வெள்ளமடம் அருகே நாக்கால்மடம் பகுதியில் மெயின் ரோட்டில் உள்ள கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாக்கடை நீர் பாய்ந்து செல்லாமல் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், கொசு உற்பத்தி அதிகமாகி அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகின்றனர். எனவே, கழிவுநீர் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயமணியன், நாக்கால்மடம்.
வீணாகும் குடிநீர்
மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் மாங்கோடு ஊராட்சியில் 9-வது வார்டு காஞ்ஞாங்காலை பகுதியில் ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் உள்ள குழாய் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், குடிநீர் வீணாக தரையில் பாய்கிறது. இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவதாஸ், மாங்கோடு.
Related Tags :
Next Story